இன்றைக்கு  மக்களின் மனங்களில் ஆங்கிலப்பள்ளியில் தங்கள் பிள்ளைகளை படிக்கவைப்பதுதான் அறிவாளித்தனம் என்ற எண்ணம் மேலோங்குகின்றது,அவ்வாறு படாதபாடுபட்டு படிக்கவைப்பதுதான் பெருமை என்று கருதுகின்றார்கள் இது சுத்த கயமைத்தனம் என்று இவர்களுக்கும் புரிவதில்லை……………………இந்த இளிச்சவாய சமூகத்திற்கும் தெரிவதில்லை…………………பட்டம் வாங்கி படித்துகொடுக்க அரசு பள்ளியில் ஆசிரியர் இருக்கும்போது……………ஏன் நாம் கடுமையாய் உழத்துபெற்ற செல்வங்களை எவனுக்கோ கொடுக்க வேண்டும்?

சங்கத் தமிழா
தலைத்தூக்கு…
சந்தத் தமிழை
சரியாக்கு….

தாயின் மொழியை
நீ பேசு…
தாழ்மை குணத்தை
விலைபேசு….

அன்னை கொடுத்த
அமிழ் போற்று..
அகிலம் சுற்றும்
மொழியாக்கு….

சிந்தை துளக்கும்
நதிகாற்று..
சித்தர் வர்த்த
பெரு ஊற்று…

பொதிகை பாடும்
பொற்பாட்டு….
பொறுமை போதும்
உடைபூட்டு….

ஆங்கில பள்ளிகளை
அணைபோட்டு…
ஆனந்த தமிழினை
தாலாட்டு….

சின்னஞ்சிறு மாணவரை
இடைநிருத்து….
சிந்திக்கும் திறன்வளர்த்து
நீ அனுப்பு…

கொல்லும் மழலையர்
பள்ளிசாத்து.=அது
இளம்வயதில் பண்ணுகின்ற
மணமுடிச்சு……

சாதிகளின் சங்கங்களை
இனிதொலைத்து.=நீ
சங்கத்து தமிழினை
காப்பாற்று….

மொழிசொல்லி ஏமாற்றும்
இனம்காட்டு.=நீ
மொத்தமாய் அவர்களுக்கு
அனல்மூட்டு……

License

Icon for the Creative Commons Attribution 4.0 International License

மீண்டும் சந்திப்போமா..... Copyright © 2015 by creative commons attribution 4.0 international license is licensed under a Creative Commons Attribution 4.0 International License, except where otherwise noted.

Share This Book